மதிமுக, திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பேச்சாளராக முக்கியப் பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ்வின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் பேசியவை இங்கே.
அவர் கூறியதாவது, “தம்பி விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து `நீயும் முதல்வன் ஆகலாம்’ புத்தகத்தை கொடுத்து தவெகவில் இணைந்தேன். ஆறு ஆண்டுகளாக எந்தக் கட்சியிலும் இல்லாமல் பெரியார், அண்ணாவின் லட்சியங்களை பேசிக் கொண்டிருந்தேன். விஜய்யை என்னை சந்தித்தவுடனேயே, “நான் உங்களின் ரசிகன்!’ என்றார்.

வசைமாரி பொழிந்தார்கள்
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால், அறிவாலயத்திலிருந்து வசைமாரி பொழிந்தார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாட வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு என்னிடம் தேதி வாங்கியிருந்தார்.