திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக அமைச்சர் அனுராக்கின் பேச்சிற்குப் திமுக எம்.பி பதில் |Thiruparankundram Issue: DMK MP Responds to BJP Minister Anurag Remarks

Spread the love

இதுதொடர்பாக பேசியிருக்கும் திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார்,

“எங்களின் திராவிட மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத் துறைக்குப் பல நலத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை 3,925 இந்து கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்குச் சொந்தமான 8,024 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பழமையான 352 கோவில்களுக்கு மேம்பாட்டு பணிகள் செய்ய சுமார் 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொன்மையான 76 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்த் திருவிழாவும் இப்போது நடத்தப்பட்டு வருகிறது.
திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சுமார் 3 கோடியே 65 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தங்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுவதற்காக இப்படிப் பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார்

திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார்

இந்த அமைதியான சூழலில் சில மதவாத சக்திகள் பொய்யான தகவல்களைப் பரப்பி, அமைதிப் பூங்காவாக இருக்கும் எங்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதை தமிழ்நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள்.

திருப்பரங்குன்றத்தில் முருகர் சிரித்தால், அதன் எதிரொலி இந்த டெல்லியிலும் கேட்கும். மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்,” என்று மக்களவையில் பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *