திருப்பரங்குன்றம் விவகாரம்
சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்வதை பார்த்து வருகிறோம்.
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். சோமநாதர் பெருமையை பற்றி பேசும் போதும், அதனை திருவிழாவாக பெருமையுடன் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
அரசியலில் இடம் இல்லை…
இத்தகைய மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.