அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாநில அரசின் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்திருக்கிறார். தீபம் ஏற்ற அரசு முன்வராததால் மனுதாரரே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அரசு ஏதோவொரு நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
(More details will be added shortly)