“திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தவெக மெளனமாக இருப்பது ஏன்” – தவெக நிர்மல் குமார் பதில் | “Why is TVK Vijay remaining silent on the Thiruparankundram issue?” – TVK Nirmal Kumar’s reply

Spread the love

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

“சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சமூகநல்லிணக்கத்தை சீர்குழைத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

இந்த விவகாரத்தில் தவெக கட்சியினர் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். விஜய்யும் இதுகுறித்து மெளனமாக இருந்து வருவது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *