திருப்பரங்குன்ற விவகாரம்: நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த திமுக | Impeachment motion against Justice Swaminathan

Spread the love

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான மனுவை திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் வழங்கியிருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

இதனால், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டிருந்தது.

அதன்படி இன்று (டிச.9) திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ஒன்றாக இணைந்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *