திருப்பூர்: ஏழை எளியோருக்கு உதவும் கரங்களாக மாறிய அரசுப்பள்ளி ஆண்டு விழா! – ஒரு நெகிழ்ச்சி தருணம் | School day event turned into a helping event

Spread the love

துயர் துடைத்த கரங்கள்:

இந்த விழாவின் மிக முக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது மாணவி தாராவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவி. இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி தாராவின் தந்தை ஜெயபால், எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தவர் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்தார். வருமானமின்றித் தவித்த அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில், பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுத்த முயற்சி பெரும் பலன் தந்தது.

சென்னை ‘கழுகு அறக்கட்டளை’ (Kazhugu Foundation) உதவியுடன், சுமார் 60,000 ரூபாய் மதிப்பிலான நான்கு தையல் இயந்திரங்கள் (2 ஓவர்லாக், 1 பேட்லாக் மற்றும் 1 சிங்கர் மெஷின்) விழா மேடையிலேயே அக்குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன. மூன்று பெண் குழந்தைகளைக் கொண்ட தங்களுக்கு, வாழ்வாதாரத்தை மீட்டுத்தந்த இந்த உதவி மிகப்பெரிய வரப்பிரசாதம் என ஜெயபால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடரும் அறப்பணி..

இந்தத் தொண்டு இப்பள்ளியில் இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் இதேபோல ஆசிரியர்களின் முயற்சியால் இரு நலிந்த குடும்பங்களுக்கு முறையே ‘டிபன் கடை’ மற்றும் ‘பழக்கடை’ அமைத்துக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்குப் பாடத்தோடு சேர்த்துப் பண்பையும், சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் இப்பள்ளி கற்றுக்கொடுத்த வருகிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் குறிவைக்காமல், ஒரு மாணவியின் குடும்பச் சூழலை உணர்ந்து தோள் கொடுத்த பூலுவபட்டி பள்ளி ஆசிரியர்களின் செயல், மற்ற கல்வி நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது..!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *