திருப்பூர், காரணப்பேட்டையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது…
“இந்த மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனத்தைப் பரிசளித்தோம்.
காரணம், இந்த மேடையில் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டை அல்ல… இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறோம்.
நம்முடைய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய செய்தி – நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம். இதை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். இந்த நம்பிக்கையை நான் மட்டும் அல்ல… இந்த நாடே வைத்திருக்கிறது. அதனால்தான், இதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று இந்தப் பரிசைக் கொடுத்திருக்கோம்.
பாசிசத்திற்கு எதிராக எழும் குரல் எல்லாம் உங்களுக்கு பின்னால் எழும் குரல்களாக இருந்து வருகின்றது. அதனால்தான், இந்த நாடு உங்களை நம்பியிருக்கிறது என்று நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.