திருப்பூர்: திமுக ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு|Women Power Will Bring DMK Back to Power: Stalin

Spread the love

இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது,

“கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்களை எங்கேயும் பார்த்திருக்கவே முடியாது. பவர்ஃபுல்லாக இருக்கிறது. வுமன் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகி உள்ளது.

தேர்தல் என்று வந்துவிட்டால், திமுகவின் ஹீரோ ‘தேர்தல் அறிக்கை’. அந்த ஹீரோவையே தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் கனிமொழி.

திமுக மாநாடு

திமுக மாநாடு
DMK | X

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அவர் செய்த போது நாம் முழுமையான வெற்றி பெற்றோம். ஆக, இந்தத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறப்போகிறோம்.

பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி.

பெண்கள் படிக்கக்கூடாது… அடுப்படியைத் தாண்டக்கூடாது… ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற அடிமைத்தனத்தை உருவாக்கினார்கள். இவற்றை உடைத்தெறிந்தது திராவிட ஆட்சி தான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *