திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி  | Training plane crashes near Thiruporur

Spread the love

திருப்போரூர்: ​திருப்​போரூர் அருகே இந்​திய விமானப்​படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூல​மாக குதித்து உயிர் தப்​பி​னார். செங்​கல்​பட்டு மாவட்​டம் தாம்​பரத்​தில் விமானபடை பயிற்சி தளம் உள்​ளது. இங்​கிருந்து நேற்று பிற்​பகல் 2.30 மணி​யள​வில் புறப்​பட்ட பயிற்சி விமானம் திருப்​போரூர் அருகே வானில் பறந்து கொண்​டிருந்​தபோது, விமானத்​தில் திடீரென தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இதனால், விமானி கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் அளித்​து ​விட்​டு, விமானத்தை கீழ்​நோக்கி இறக்க முயற்சி செய்​த​நிலையில், விமானம் கட்​டுப்​பாட்டை இழந்​த​தால் விமானி பாராசூட் மூல​ம் குதித்து உயிர் தப்பினார். பயிற்சி விமானம் புறவழிச் சாலை அருகே உள்ள உப்பளம் பகு​தி​யில் விழுந்து பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது.

அந்த இடத்​தில் இடத்​தில் குடி​யிருப்​போ, கட்​டிடமோ இல்​லாத​தால் பெரிய விபத்து ஏற்​படவில்​லை. தகவல் அறிந்த தாம்​பரம் விமானப்​படைஅ​தி​காரி​கள், மீட்பு குழு​வினர் விரைந்து வந்து மீட்பு பணி​களில் ஈடு​பட்​டனர்.விமானியை, ஹெலி​காப்​டரில் மருத்​து​வ​மனை கொண்டு சென்​றனர். திருப்போரூர் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடுபட்​டனர். இதேபோல் புதுக்கோட்டை அருகே இன்ஜின் கோளாறு காரணமாக தனியார் பயிற்சி விமானம் ஒன்று நேற்று முன்தினம் சாலையில் தரையிறங்

கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *