திருமணத்தை மறைத்து உறவில் இருந்த காதலன்; அதிகாலையில் காதலி செய்த பகீர் சம்பவம்!

Spread the love

டெல்லியை சேர்ந்த அமீனா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விசர்ஜீத் என்ற நபரை காதலித்து வந்தார். விசர்ஜீத் அடிக்கடி தனது காதலியை சந்திக்க டெல்லி வருவது வழக்கம். இரண்டு பேரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் விசர்ஜீத் தனது காதலியை பார்க்க டெல்லி வந்திருந்தார். அவர் அன்றைய தினம் தனது காதலி வீட்டில் தங்கி இருந்தார்.

அதிகாலை 2.30 மணிக்கு அமீனா திடீரென கத்தியை எடுத்து தனது காதலன் விசர்ஜீத் அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டார். உடனே விசர்ஜீத் ரத்த காயத்தோடு அருகில் உள்ள இந்துராவ் மருத்துவமனைக்கு தானாக போய் சேர்ந்தார். அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங்க் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸில் விசர்ஜீத் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், காதலி அமீனாவை பார்க்க டெல்லி வந்ததாகவும், இரவில் உறங்கும் முன்பாக பாலில் எதையோ கலந்து குடிக்க கொடுத்ததாகவும், அதிகாலை 2.30 மணிக்கு அரைமயக்கத்தில் இருந்தபோது கூரிய ஆயுதத்தால் தனது அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

திருமணத்தை மறைத்த காதலன்

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், விசர்ஜீத் தனக்கு நடந்த திருமணத்தை காதலி அமீனாவிடம் மறைத்து தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இது சமீபத்தில் அமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் கோபத்தில் அமீனா தனது காதலனை வீட்டிற்கு வரவைத்து கத்தியால் அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டார் என்று தெரிய வந்தது. இரவில் பாலில் போதைப்பொருளை கலந்து கொடுத்து அமீனா இக்காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமீனா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *