திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

dinamani2F2025 08 282Fimznd2532Fsk
Spread the love

திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 15 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தனது மனைவி ஆர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ”15 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் ஆர்த்தி. நீ எப்போது என்னுடையவள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

Actor Sivakarthikeyan congratulate his wife on her wedding anniversary.

இதையும் படிக்க : ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *