திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொன்னாலும், அந்தத் திருமண வாழ்க்கை சிலருக்கு நரக வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. இதனால், திருமணமான சில மாதங்கள் அல்லது சில நாட்களிலேயே கூட விவாகரத்து செய்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் திருமணமான ஒரே நாளில் தனது கணவனை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தியோரியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள பாலூனி என்ற பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் விஷால். அவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் திருமண சடங்குகள் நடைபெற்றன. காலையில் தொடங்கி மாலை வரை திருமண சடங்குகள் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு பூஜா தனது கணவன் வீட்டிற்கு சென்றார்.
பூஜா, கணவன் வீட்டினரின் அனுமதியுடன் தனது அறைக்குள் சென்றார். அடுத்த 20 நிமிடங்களில் அந்த அறையிலிருந்து வெளியே வந்த பூஜா, “எனக்கு விஷாலுடன் வாழ முடியாது. நான் எனது பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன். எனது பெற்றோருக்கு போன் செய்யுங்கள்,” என்று கூறினார்.