திருமணம் நின்றதால் சிறுமி தலை துண்டித்து கொலை

Girl
Spread the love

திருமணம் நின்றதால் 16 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து சென்ற சைக்கோ வாலிபர்.

திருமணம் நிச்சயதார்த்தம்

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை தாலுகாவில் உள்ள ஹம்மியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(32). இவருக்கும் சூர்லப்பி கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி மீனா என்பவருக்கும் கடந்த 9-ந்தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சிறுமிக்கு உரிய திருமண வயதான 18 வயது பூர்த்தி ஆகாததால் இது பற்றி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடைபெற்ற வீட்டுக்கு வந்த அதிகாரிகள் இருதரப்பு பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சிறுமி மீனா உரிய திருமண வயது அடைந்தும் திருமணம் செய்து வைக்குமாறு அறிவுறுத்தினர்.திருமணத்திற்கு 2 ஆண்டுகள் காத்திருக்காறு தெரிவித்தனர். மேலும் தற்போது திருமணம் செய்து கொண்டால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.
இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் புறப்பட்டு சென்றனர்.ஆனால் புதுமாப்பிள்ளை பிரகாசுக்கு திருமணம் நின்றதால் ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக திருமணம் செய்து வைக்கும் படி தெரிவித்தார்.

தலை துண்டித்து கொலை

அவருக்கு பெற்றோர் புத்திமதி கூறி அழைத்து சென்றனர். ஆனாலும் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றதால் கடும் கோபத்தில் இருந்த பிரகாஷ் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டான்.
அதன்படி நிச்சயதார்த்தம் நடந்த அன்றே மாலை 5.30 மணியளவில் பிரகாஷ் தனது வீட்டில் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் மீனாவின் வீட்டுக்குசென்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் அவரை தடுக்க முயன்றனர். இதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் அரிவாளால் மீனாவின் பெற்றோரை தாக்கினான். பின்னர் மீனாவை அரிவாளை காட்டி மிரட்டி வீட்டில் இருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றான். அங்கு சிறுமி மீனாவை ஈவுஇரக்கமின்றி அரிவாளால் தலையை தனியாக துண்டித்து கொடூரமாக கொன்றான். பின்னர் சிறுமியின் தலையை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

இன்று கைது

இதற்குள் தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் கட்டுப்பகுதியில் தலை இல்லாமல் கிடந்த சிறுமி மீனாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.தப்பி ஓடிய பிரகாசை தொடர்ந்து தேடி வந்தனர். கடந்த 2 நாட்களாக பிரகாஷ் போலீசாரிடம் சிக்காமல் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று தகவல் பரவியது. ஆனால் இதை போலீசார் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பிரகாசை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலையும் சிக்கியது

இதற்கிடையே தேடப்பட்டு வந்த சிறுமி மீனாவின் தலையும் அங்குள்ள காட்டுப்பகுதியில் இன்று மீட்கப்பட்டது. சைக்கோ கொலைகாரன் பிரகாசிடம் போலீசார் தீவிர விசார¬ணை நடத்தி வருகிறார்கள்.

10-ம் வகுப்பு தேர்ச்சி

கொலையுண்ட சிறுமி மீனா 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். அவர் கொலையுண்ட 9&ந்தேதி தான் தேர்வு முடிவும் வெளியாகி இருந்தது. அவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் உற்சாகத்தில் இருந்தார்.
இந்த நிலையில்தான் அவருக்கு அன்றே திருமண நிச்சய தார்த்தம் நடந்து உள்ளது. தற்போது அதுவே மீனாவின் உயிரை பறித்து விட்டது. உயர் படிப்பு படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த சிறுமியின் கனவு நசுக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சைக்கோ கொலையாளி பிரகாஷ் தாக்கியதில் பலத்த காயம்அடைந்த சிறுமியின் பெற்றோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிறுமியின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *