இது குறித்துத் தகவல் அறிந்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், அப்போதைய விருதுநகர் எஸ்.பி. மனோகரன் மேற்பார்வையில் தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கோவிலாங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன், பேரையூர் பிரபாகர், விஜய், ராம்குமார், ஜெயக்குமார், கல்லூரி மாணவர் அழகுமுருகன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சிறுவன் மீதான வழக்கு இளஞ்சிறார் நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது.
மற்ற 6 பேர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
வழக்கின் இறுதி விசாரணையில், நீதிபதி புஷ்பராணி, சீனிவாசன், பிரபாகரன், விஜய், ராம்குமார், ஜெயக்குமார், அழகுமுருகன் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.70,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.