திருமாவளவனுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு கோரி அரியலூரில் விசிகவினர் உண்ணாவிரதம் | Ariyalur VCK Members Hunger Strike for Demand Z Security to Thirumavalavan

Spread the love

அரியலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அண்ணாசிலை அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும், மாநில அரசுகள் கூடுதல் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று (நவ.10) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில், திருமாவளவனுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசி வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு அக்கட்சியின் அரியலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அங்கனூர் சிவா தலைமை வகித்துள்ளார். கிழக்கு மாவட்டச் செயலாளர் கதிர்வளவன் உட்பட கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *