திருமாவளவன் அணி மாறுவாரா? – தமிழிசைக்கு விசிக எம்எல்ஏ பதில் | vck mla ss balaji react on tamilisai post about thirumavalavan

1342827.jpg
Spread the love

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் அணி மாறுவாரா? என்ற முன்னாள் ஆளுநர் தமிழிசையின் கேள்விக்கு விசிக எம்எல்ஏ பதிலளித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஆதவ் அர்ஜுனா ஆறு மாதத்துக்கு இடைநீக்கம் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு. ஆறு மாதங்களுக்குள் ஆதவ் மனம் மாறுவாரா? அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, சமூக வலைதள பக்கத்தில் அளித்த பதில்: “அரசியல் எல்லைகளைக் கடந்து எங்கள் தலைவரின் மதிப்பு உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். அவர் முடிவு செய்து விட்டால் எந்த தயக்கமும் இன்றி அறிவிக்கக் கூடியவர். அனைத்து கதவுகளையும், வாய்ப்புகளையும் திறந்த நிலையில் வைத்துக் கொண்டு பேரம் பேசும் நிலையிலான தலைவர் அவர் அல்ல” என்று எஸ்.எஸ்.பாலாஜி பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *