திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
மதுரையில் நடந்த விசிக நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் அவர் பேசியதாவது: ஆதிக்க மனப்பான்மையை தூக்கி எறியக்கூடிய அரசியலைதான் நாங்கள் உருவாக்குகிறோம். ஆணவப் படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வை, கல்வி நிலையங்களில் இருந்து உருவாக வேண்டும். 10 லட்சத்துக்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்களுக்கான தரவுகளை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.
தற்போது பலர் சமூக ஊடகங்களில் எனது சாதியைக் குறிப்பிடுகின்றனர். எனக்கே என்னுடைய சாதி என்னவென்று தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன். கொள்கை, அதிகாரக் கூட்டணி என்றெல்லாம் பேசுகிறார்கள். அதிகாரத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள். ஒருவர் மட்டுமே ஆளப் பிறக்கவில்லை. எங்களுக்கான அரசியலை எங்களால் உருவாக்க முடியும். திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.