திரும்பவும் முதல்ல இருந்தா..! தங்கம், வெள்ளி விலை மீண்டும் விர்ர்ர்ர்ர் – Kumudam

Spread the love

சர்வதேச சந்தையின்  அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.7600 குறைந்தது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600 விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் காலையில்  தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,030 விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,240 விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை உயர்ந்த போதிலும், காலையில் வெள்ளி விலை கடும் சரிவை கண்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனை ஆனது. 

தங்கம் விலை மீண்டும் உயர்வு 

மாலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,160 விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு 

காலையில் குறைந்த வெள்ளி விலை, மாலையில் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *