திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு! நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்! ஏன் தெரியுமா | 2025 deepam festival worship in thiruvannamalai for sakthi vikaan readers wealthy life

Spread the love

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு! நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்! ஏன் தெரியுமா! தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இதோ. டிசம்பர் 3 – ம் தேதி அம்மணி அம்மன் ஆலயத்தில்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு

அன்றாடம் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபம், ஆயுள், ஆரோக்கியம், நன்மை, ஐஸ்வர்யம், கீர்த்தி, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்கிறது பூஜாபத்தி நூல்கள். எங்கு ஒளியோடு வழிபாடு நடக்கிறதோ அங்கு வேண்டுதல்கள் நிறைவேறும். விளக்கின் அடியே பிரம்மா, விளக்கின் தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, விளக்கில் எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர் என்பது ஐதிகம். யார் தீபத்தை ஏற்றி வைக்கிறாரோ அவரது வாழ்க்கையில் உள்ள இருள் விலகி ஷாந்தியும் சௌக்கியமும் நிலவும் என்பது பெரியோர் வாக்கு. அதிலும் தீபம் முதலில் பெரும் ஒளியாக எழுந்த திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் 21 தலைமுறைகளுக்கும் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை நாளில் ஈசனை எண்ணி ஈசனின் வடிவாகவே உள்ள மலையை நோக்கி தீபமேற்றி வழிபட்டால் எண்ணியவை யாவும் நிறைவேறும். நேர்மறை ஆற்றலும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். திருக்கார்த்திகை நாளில் விளக்கேற்றி வழிபட தடைபட்ட காரியங்கள் உடனே நிறைவேறும். இந்த நாளில் குபேரன் ஈசனை வழிபடும் நாள் என்பதால் அதே நாளில் விளக்கேற்றி வழிபட நம் வாழ்வில் செல்வ வளம் பெருகும். குறிப்பாக வியாபாரம், தொழில் செய்பவர்கள் கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி அடைந்து, செல்வ வளம் பெருகும்.

ராசி தீப வழிபாடு

ராசி தீப வழிபாடு

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் கூடி வழிபடுவதால் பெரும் நேர்மறை ஆற்றல் அங்கு எதிரொலிக்கும். இவ்வேளையில் தெய்வ சக்திகளின் அதிர்வு மேலோங்கி, தீய சக்திகளின் ஆற்றல் வீழும். இதனால் அங்கு சொல்ல முடியாத அளவுக்கு தெய்விக உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் எழும். இவ்வேளையில் தீபத்தின் ஒளி தீய சக்திகளை அகற்றும். இதனால் உங்கள் மனதில் நன்மை மற்றும் நிம்மதி மேம்படும். மேலும் அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றம் அதிகரிக்கும். இதனாலேயே திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் அத்தனை கூட்டம் கூடுகிறது எனப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *