திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஆலயத்தில் உங்களுக்காக ராசி தீபம் | 2025 december 3 tiruvannamalai karthigai deepam parihaaram worship in ammani amman temple

Spread the love

மறக்காமல் இந்த வழிபாட்டை செய்தால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்! சித்தர்கள் சொன்ன ராசி தீப வழிபாடு! 2025 டிசம்பர் 3-ம் புண்ணிய நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயத்தில் உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ராசி தீப வழிபாடு

ராசி தீப வழிபாடு

சித்தர்களின் தபோவன பூமி என்றால் அது திருவண்ணாமலைதான். புராண காலத்தில் பிருகு முனிவர் தொட்டு விசிறி சாமியார் வரை இந்தியாவின் அத்தனை சித்தர்களின் அதிசயங்களையும் கண்ட பூமி திருவண்ணாமலை. அதிலும் ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், ஸ்ரீராம் சூரத்குமார் ஆகியோர் மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி வாசம் செய்யும் புண்ணிய பூமியில் இருந்து வரும் அவர்களின் அம்சமாகவே வாழ்ந்தவர்கள். நவகோடி சித்தர்கள் இன்றும் உலாவும் திருவண்ணாமலை கேட்டதைக் கொடுக்கக் கூடிய அற்புத மலை. சித்தர்களின் தவப்பயனால் அங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியும் தெளிவும் இன்றளவும் கிடைப்பது உண்மை.

அனலாக எழுந்து ஜோதியாக ஒளிர்ந்த மலை திருவண்ணாமலை. சிவமே அங்கு ஜொலிப்பதால் தீபம் ஏற்றி திருவண்ணாமலையில் வேண்டினால் நினைத்தது நடக்கும். வேண்டியது கிடைக்கும் என்பது சித்தர்களின் வாக்கு. திருவண்ணாமலையும் சித்தர்களும் அதிலும் அம்பிகையும் தேவர்களும் தீப விழாவைக் கொண்டாடிய கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் எத்தனை பெரிய வேண்டுதல் என்றாலும் அது நடக்கும். அச்சம், கவலை, தரித்திரம் எல்லாம் நீங்கும்.

பூவுலகில் பிறந்த எந்த ஜீவனும் ஒரே ஒருமுறை இந்தத் தீபத் திருவிழாவை திருவண்ணாமலையில் கண்டால் போதும்பிறப்பிலா பேரின்ப நிலையை அடைந்து வாழ்வின் அத்தனை சௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்வேண்டியதை எல்லாம் அருளக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப விளக்கீடுதான். கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம்.

திருவண்ணாமலை ராசி தீப பரிகார வழிபட்டால் தொழிலில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், கூடி வரும் திருமணம் தள்ளிப் போதல். எல்லா பணிகளும் பாதியில் நிற்றல். அடிக்கடி ஏமாந்து பணத்தை இழப்பது, சொந்தங்களால் ஏமாற்றப்படுவது என பல ஆண்டுகள் பரிதவித்து நிற்பவர்களுக்கு நிச்சயம் இந்த வழிபாடு பலன் அளிக்கும். அதுவும் திருவண்ணாமலை சித்தபுருஷி அம்மணி அம்மன் ஜீவசமாதி ஆலயத்தில் இந்த பரிகார தீப வழிபாட்டில் சங்கல்பித்துக் கொண்டால் உங்களின் எல்லா பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் நலமும் வளமும் பெறுவீர்கள் என்பது உறுதி.

திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை தீபம்

உங்கள் பிரச்னைகள் யாவும் தீர வளம் சேர உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. 3-12-25 கார்த்திகை தீப நாளில் அம்மணி அம்மன் கோயிலில் நடைபெறும் ராசி தீப வழிபாடு சங்கல்ப விழாவில் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

ராசி தீப வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும்.

திருவண்ணாமலை அம்மணி அம்மன்

திருவண்ணாமலை அம்மணி அம்மன்

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

ராசி தீப வழிபாடு

ராசி தீப வழிபாடு

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *