சென்னை: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (நவ.30) மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மாமல்லபுரம் – புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையெட்டி, புதுவையில் சனிக்கிழமை மாலை முதல் மின் இணைப்புகள் 12 மணி நேரத்துக்கு மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.