திருவண்ணாமலை மகா தீபம்: `தளர்வான கற்பாறைகளால் ஆபத்து’ – பக்தர்கள் மலை ஏறத் தடை! | tiruvannamalai maha deepam – devotees banned from climbing the mountain

Spread the love

தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு `டிட்வா’ புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை அற்றும், ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு

எனவே, “புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. `மலை ஏற முயற்சிக்க வேண்டாம்’ ” என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *