திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம் | Technical glitch on Delhi bound flight carrying 150 passengers including 5 MPs

1372789
Spread the love

சென்னை: ​திரு​வனந்​த​புரத்​தில் இருந்து 5 எம்​பிக்​கள் உட்பட 150 பயணி​களு​டன் டெல்​லிக்கு புறப்​பட்ட விமானத்​தில் தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. விமானி​யின் திறமை​யால் உயிர் பிழைத்​த​தாக காங்​கிரஸ் எம்பி வேணுகோ​பால் தெரி​வித்​தார்.

கேரள மாநிலம், திரு​வனந்​த​புரத்​தில் இருந்து டெல்லி செல்​லும் ஏர் இந்​தியா பயணி​கள் விமானம் நேற்று முன்​தினம், இரவு 8.17 மணிக்கு புறப்​பட்​டது. அந்த விமானத்​தில் எம்பி வேணுகோ​பால், கொடி குன்​னில் சுரேஷ், அடூர்பிர​காஷ், கே.​ரா​தாகிருஷ்ணன் உட்பட 5 எம்​பிக்​கள் மற்​றும் 150 பயணி​கள் இருந்​தனர்.

இரவு 10 மணி​யள​வில் விமானம் நடு​வானில் பறந்து கொண்​டிருந்த போது, விமானத்​தில் திடீரென தொழில்​நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை அவசர​மாக தரை​யிறக்க முடிவு செய்த விமானி, திரு​வனந்​த​புரம் மற்​றும் டெல்​லி​யில் உள்ள விமான கட்டுப்​பாட்டு அறை​களு​டன் தொடர்பு கொண்டு தகவலை தெரி​வித்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தில் விமானத்தை தரை​யிறக்​கு​மாறு விமானிக்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, சென்னை விமான நிலை​யத்​தில் விமானம் அவசர​மாக தரை​யிறங்​கு​வதற்​கான பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டதையடுத்​து, இரவு 11.20 மணி​யள​வில் விமானம் சென்​னை​யில் பத்​திர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது.

பின்னர், நேற்று அதி​காலை 1 மணி​யள​வில் மாற்று விமானம் மூலம் 5 எம்​பிக்கள் உட்பட 150 பயணி​களும் டெல்லி சென்​றனர். விமானத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்பக் கோளாறை விமானி சரி​யான நேரத்​தில் கண்​டு​பிடித்​த​தால் 5 எம்​பிக்​களும், 150 பயணிகளும் உயிர் தப்​பினர், விசா​ரணை நடத்த வலி​யுறுத்​தல் காங்​கிரஸ் எம்பி வேணுகோ​பால் தனது எக்ஸ் வலை​தளப்​ப​தி​வில், “திரு​வனந்​த​புரம் விமான நிலை​யத்​தில் இருந்து டெல்லி புறப்​பட்ட விமானத்​தில் சிக்​னல் கோளாறு ஏற்​பட்​டதையடுத்​து, உடனடியாக விமானம் சென்​னைக்கு திருப்பி விடப்​பட்​டு, அங்கு தரை​யிறங்க வந்த போது, அதே ஓடு​பாதை​யில் மற்​றொரு விமானம் குறுக்​கிட்​டது.

இதைக் கண்டு அதிர்ச்​சி​யான எங்​கள் விமானி, உடனடி​யாக தனது விமானத்தை மீண்​டும் உயரே பறக்க செய்து அனை​வரின் உயிரை​யும் காப்​பாற்​றி​னார். சென்​னை​யில் விமானம் தரை​யிறங்க அனு​மதி வழங்​கி​விட்​டு, அதே நேரத்​தில் மற்​றொரு விமானத்​துக்கு அதே ஓடு​பாதை​யில் எப்​படி அனு​மதி வழங்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக, டைரக்​டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவி​யேசன், சிவில் விமான போக்​கு​வரத்து துறை அமைச்​சகம் முழு விசா​ரணை நடத்த வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இதற்கு பதில் அளித்​த ஏர் இந்​தி​யா, “தொழில்​நுட்​பக் கோளாறு மற்​றும் மோச​மான வானிலை காரண​மாக விமானம் சென்​னைக்கு திருப்பி விடப்​பட்டது. நீங்​கள் சொல்​வது போல் சம்​பவம் நடக்​க​வில்​லை. விமானம் திருப்பிவிடப்​பட்​ட​தால் உங்​களுக்கு ஏற்​பட்ட சிரமத்​துக்கு வருந்​துகிறோம்” என்று தெரி​வித்​துள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *