
தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த பிறகும் ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாயின. ஸ்ரீலேகாவுக்கு மேயர் பதவி வழங்கப்படாததைத் தொடர்ந்து அவர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது. இதையடுத்து ஸ்ரீலேகாவின் இந்த கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஸ்ரீலேகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“கேரளாவில் மீடியா செயல்பாடுகள் மோசமாக உள்ளன. என்னை அலுவலகத்தில் செல்லவிடாமல் முக்கிய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் பின்னால் நடந்து கேள்விகளை கேட்டு தொல்லை செய்தனர். பின்னர், பேட்டியின் பகுதிகளை எடிட் செய்து வெளியிட்டனர். விவாதங்களை விற்பனைசெய்து ரேட்டிங்கை அதிகரிக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் மக்கள் சிலராவது அதை நம்பிவிடுவார்கள். அவர்கள் எவ்வளவு பொய்களை கூறினாலும் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சிறப்புமிக்க பாரதிய ஜனதா கட்சியில் பணி செய்வது எனக்கு பெருமையாக உள்ளது. நான் ஒரு பெருமைமிக்க கட்சித் தொண்டன், ஒரு மகிழ்ச்சியான வார்டு கவுன்சிலர். அர்ப்பணிப்புள்ள ஓர் பொது ஊழியர்.”
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.