திருவெண்ணெய்நல்லூர் வராகி அம்மன் கோயிலில் சிக்கியவர்கள் வெள்ளம் வடிந்ததால் வீடு திரும்பினர் | People trapped in floods near Tiruvennainallur return home after floodwaters recede

1342002.jpg
Spread the love

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் தொட்டிக்குடிசை, அரசூர் அருகே வராகி அம்மன் கோயில் மற்றும் ஆற்றுமணல் திட்டு பகுதியில் சிக்கி தவித்தவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளம் வடிந்த பின் வீடு திரும்பினர்.

விழுப்புரம் மாவட்டத்தில், மீட்பு குழுவினர் செல்லமுடியாத இடங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்று, கோவையிலிருந்து, ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு மீட்பு பணிக்காக விழுப்புரம் வந்தது.அதன் மூலம், விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் தொட்டிக்குடிசை பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 2 பேரை மீட்க முயன்றனர். ஆனால், மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால், மீட்க முடியவில்லை.

இதனையடுத்து, அரசூர் அருகே வராகி அம்மன் கோயிலில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த 20 பேரை மீட்கவும், தொடர்ந்து, அருகே ஆற்றுமணல் திட்டு பகுதியில் சிக்கி தவித்த 3 பேரையும் மீட்கவும் சென்றனர். ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால், ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீட்க முடியாமல் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளம் வடிந்த பின் அனைவரும் வீடு திரும்பினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *