திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூட அன்புமணி எதிர்ப்பு | Anbumani opposes closing of Thiruverkadu Primary Health Center

1380358
Spread the love

சென்னை: ​திரு​வேற்​காடு ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை மூடுவதற்கு பாமக தலை​வர் அன்​புமணி எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னையை அடுத்த திரு​வேற்​காடு காடு​வெட்டி பகு​தி​யில் 60 ஆண்​டு​களுக்​கும் மேலாக செயல்​பட்டு வரும் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு இடமாற்​றம் என்ற பெயரில் மூடு​விழா நடத்த தமிழக அரசு துடிக்​கிறது. கிராமப்​புற மக்​களுக்கு மருத்​துவ சேவை அளித்து வரும் ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை மூட முயல்​வது கண்​டிக்​கத்​தக்​கது.

காடு​வெட்டி பகு​தி​யில் 1967-ம் ஆண்​டில் அரசு மகப்​பேறு மைய​மாக தொடங்​கப்​பட்ட இந்த மருத்​துவ மையம், 2013-ல் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டு, அரசு ஆரம்ப சுகா​தார நிலை​ய​மாக செயல்​பட்டு வரு​கிறது. 20-க்​கும் மேற்​பட்ட கிராமங்​கள் இதனால் பயனடைந்து வரு​கின்​றன. இந்த ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை நூம்​பல் புலி​யம்​பேடு பகு​திக்கு மாற்ற திமுக அரசு முடிவு செய்​திருக்​கிறது. அங்கு இதை நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​ய​மாக மாற்ற 2022-ம் ஆண்​டில் ரூ.1.20 கோடி ஒதுக்​கப்​பட்​டது.

அந்த நிதி​யைக் கொண்டு காடு​வெட்டி பகு​தி​யிலேயே ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை மேம்​படுத்​தி​யிருந்​தால் எந்த சிக்​கலும் ஏற்​பட்​டிருக்​காது. ஆனால், நூம்​பல் புலி​யம்​பேடு பகு​தி​யில் புதி​தாக நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யம் அமைக்​கப்​படு​வது தான் அனைத்து சிக்​கல்​களுக்​கும் காரணம் ஆகும். புதிதாக அமைக்​கப்​படும் நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலையம் 7 கிமீ தொலை​வில் அமைக்​கப்​படு​கிறது. அங்கு செல்ல போக்​கு​வரத்து வசதி​யும் இல்​லை. சாலை வசதி​யும் இல்​லை.

இத்​தகைய சூழலில் திரு​வேற்​காடு மக்​கள் அங்கு சென்று மருத்​து​வம் பெற இயலாது. மருத்​து​வ​மனை​கள் மக்​களின் நலனுக்​காகத்​தான் இருக்க வேண்​டும். எனவே, காடு​வெட்டி ஆரம்ப சுகா​தார நிலை​யம் இப்​போது இருக்​கும் இடத்​தில் தொடர்ந்து செயல்பட அனு​ம​திக்க வேண்​டும்.

அதற்கு கூடு​தல் நிதி ஒதுக்கி மேம்​படுத்த வேண்​டும். நூம்​பல் புலி​யம்​பேடு பகு​தி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை தனித்து செயல்பட அனு​ம​திக்க வேண்​டும். அந்த நிலை​யத்​துக்கு தேவை​யான மருத்​து​வர்​கள் மற்​றும் பிற பணி​யாளர்​களை அரசு நியமிக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *