தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மேல வீதியில் உள்ள சாக்கடை உடைந்து 8 மாதங்களாகியும் சரி செய்யவில்லை என்று குறைபடும் பொதுமக்கள், அதை உடனடியாகச் சீரமைத்து சுகாதாரத்தை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்தது வருகிகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள்,
“இந்தச் சாலையை ஒட்டி அமைஞ்சிருக்க சாக்கடை உடைஞ்சு மாசக்கணக்குல சுகாதார சீர்கேடு நிலவிட்டு இருக்குது. இதைப் பத்தி எட்டு மாசமா நிறைய பேர் கேட்டுட்டுப் போறாங்க. ஆனா யாருமே இதை சரி செய்ய முன் வரவே இல்ல. இங்க 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்குறோம்.
இந்தச் சாக்கடை ஆரம்பத்திலேயே திறந்த வெளியாகத்தான் இருந்துச்சு. தினமும் இந்தச் சாலையைக் கடக்கும்போது வரும் துர்நாற்றம் மயக்கமே வர்ற மாதிரி இருக்கும்.
கிட்டத்தட்ட எட்டு மாசமா இந்தச் சாக்கடை இப்படியேதான் கிடக்கு. அதைக்கூட தாங்கிக்கிட்டு இருந்துட்டோம். ஆனா… இப்போ அந்தச் சாக்கடையை ஒட்டி உள்ள சாலையும் உடைஞ்சுட்டே வருது. பாதிக்குப் பாதி உடைஞ்சு போயிருச்சு.