பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சகாந்தா மற்றும் சிக்தி இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் பக்ரா ஆற்றின் குறுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பாலம் கட்டப்பட்டது. ரூ.12 கோடி செலவில் இந்த பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா நடைபெற இருந்தது.
பாலம் இடிந்தது
இந்த நிலையில் திறப்பு விழாவுக்கு முன்பே இந்த பாலம் இன்று(18&ந்தேதி) மாலை திடீரென இடிந்து விழுந்தது.பாலத்தின் உடைந்த பகுதியில் ஆற்றில் விழுந்து கிடக்கிறது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.
மேலும் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் உறுதி தன்மை குறித்து கேள்வி எழுந்து உள்ளது. அதனை கட்டிய காண்டிராக்டர் மற்றும் அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் சிக்கலில் மாட்டி உள்ளனர்.
பொதுமக்கள் அதிர்ச்சி
கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் நொடியில் உடைந்து ஆற்றில் கரைந்து போனது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் பாலம் இடிந்ததாக தெரிகிறது. மேலும் திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்ததால் பெரிய அளவிலான விபத்தும் தவிர்க்கப்பட்டு உள்ளது.
விசாரணை நடத்த வேண்டும்
இதுகுறித்து சிக்தி தொகுதி எம்.எல்.ஏ. விஜய் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கட்டுமான நிறுவன காண்டிராக்டரின் அலட்சியத்தால் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதையும் படியுங்கள்: