
பின்னர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ கூறுகையில், “முதலை நடமாட்டம் உள்ள ஆற்று பகுதியில் மக்கள் சில நாள்களுக்கு இறங்காமல் இருக்கவேண்டும். முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை சார்பில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் எத்தனை முதலைகள் உள்ளன என்பதை உறுதி செய்ய வனத்துறை தெர்மல் இமேஜ் எடுக்க முடிவு செய்துள்ளது. அதற்காக ட்ரோன் கேமரா மூலமாக படம் எடுக்கும் பணிகள் துவங்கும். கணக்கெடுக்க வசதியாக ஆற்றோரம் உள்ள புதர்கள் அகற்றப்படும்.
எத்தனை முதலைகள் ஆற்றில் உள்ளன என்பதை உறுதிசெய்துவிட்டால், அதை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருசில நாள்களில் இந்தப் பணிகள் முழுமைபெறும். மக்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் இந்தப் பணிகளை நான் தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளேன். மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முதலைகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் வரை குறிப்பிட்ட பகுதியில் ஆற்றில் இறங்க வேண்டாம்” என்றார்.