தில்லியில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் லேசான காயமடைந்தனர்.
தலைநகர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 15 பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்தது.
மாலை 5.15 மணியளவில் பேருந்து ரிங்ரோட்டை அடைந்தபோது, அதன் பின்பகுதியில் இருந்து புகை கிளம்புவதை ஓட்டுநர் கண்டார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
உடனே தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி அவர் தீயை அணைத்தார்.
பின்னர் பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் கீழே இறங்கினர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட இருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
குற்றவியல் மற்றும் தடவியல் குழுக்கள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டன.