தில்லியில் அரவிந்த் கேஜரிவால் மீது திரவம் வீசிய நபர்: பாஜக காரணமா?

Dinamani2f2024 11 302fhsqcc98f2fnewindianexpress2024 11 303dj511pxpti11302024000276a.jpg
Spread the love

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது பிராசாரத்தின் போது ஒருவர் திரவத்தை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேஜரிவால் மீது திரவம் வீச்சு

மதுபான கொள்கை வழக்கில் கைதான தில்லியின் அரவிந்த் கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அதிஷி தில்லி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கேஜரிவால் தில்லியில் தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், இன்று (நவ.30) தனது ஆதரவாளர்களுடன் கேஜரிவால் பிரசாரத்தின்போது நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கேஜரிவால் மீது திரவத்தை ஊற்றினார். உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரைத் தடுத்ததும் ஆம் ஆத்மி கட்சியினர் அவரைத் தாக்கினர். பின்னர், காவல்துறையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். திரவம் வீசிய அந்த நபரின் பெயர் அசோக் ஜா என்றும் அவர் அந்தப் பகுதியில் வசிப்பவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க | அமித் ஷா தலைமையில் செயல்படும் குண்டர்கள்: கேஜரிவால் குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் பேசிய தில்லி அமைச்சர்சௌரவ் பரத்வாஜ், “பாஜக தலைவர்கள் அனைத்து மாநிலங்களிலும் பிரசாரக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.அவர்கள் ஒருபோதும் தாக்கப்படுவதில்லை. ஆனால், அரவிந்த் கேஜ்ரிவால் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாஜகவினரால் நங்கலோ மற்றும் சாட்டர்பூரில் அவர் தாக்கப்பட்டார். தொடர்ந்து இன்று தாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் இதற்கென எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

பாஜகவின் செயலா?

இந்தத் தாக்குதல் சம்பவத்தை பாஜவினர் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தில்லி முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தாக்குதல் நடத்தியவர் பாஜக உறுப்பினர் எனப் பதிவிட்டுள்ளார்.

அந்த நபரின் பாஜக உறுப்பினர் சேர்க்கை விவரப் புகைப்படத்தையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ள தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், இது கேஜரிவாலின் பழைய உத்தி. தேர்தலுக்காக பாஜகவின் மீது குற்றம் சாட்டுவதற்கு இதுபோன்ற நாடகங்களை நடத்தி வருகிறார். தில்லி காவல் துறை அந்த நபரை விசாரித்து உண்மையை கண்டறியவேண்டும். அரசியல் பிரசாரங்களில் ஒருபோதும் வன்முறையை பாஜக செய்ததில்லை” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *