தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

dinamani2F2025 09 052Fo7nwjx712Fnewindianexpress2024 10 05t4agtlsdIllegal stay.avif
Spread the love

தென்மேற்கு தில்லியின், துவாரகா பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் உரிய அனுமதியின்றி இந்தியாவில் வசித்த 15 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டு, காவலில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 13 நைஜீரியா நாட்டினர் மற்றும் 2 வங்கதேசத்தினர் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக, இன்று (செப்.5) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தில்லி அரசு அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிர அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *