தில்லியில் தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்

Dinamani2f2024 052f5a00b7ab D295 427e 8970 731331bf3e4b2fani 20240529021859.jpg
Spread the love

வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து புது உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, அதிகாலை 4.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு ஒரு தகவல் வந்தது. அதில் தனியார் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20-25 வாகனங்கள் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

பொய், வஞ்சக அரசியல் செய்யும் கேஜரிவால்: அமித்ஷா விமர்சனம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *