தில்லியில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி!

Dinamani2f2024 08 192fmnpsbp9x2fpti08 19 2024 000091b.jpg
Spread the love

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் தில்லியில் போராட்டம் தொடர்வதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை கைது செய்தது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், கொலை செய்யாத பயிற்சி மருத்துவரின் வீட்டிற்கு இன்று சென்றுள்ளனர்.

PTI08 19 2024 000111B

இதனிடையே, பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தில்லியில் மருத்துவர்கள் இன்று 8-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர்.

PTI08 19 2024 000077A

பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படவில்லை, மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *