தில்லியில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை!

Dinamani2f2024 09 092fc1capljc2fscreenshot202024 09 0920153840.jpg
Spread the love

காற்று மாசு காரணமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தில்லி அரசு தடை வித்து உத்தரவிட்டுள்ளது.

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தில்லியில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவைக் கடுமையாக பின்பற்ற தில்லி காவல்துறை, தில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை ஆகியோருடன் இணைந்து செயல் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், இது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 21 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தில்லி அரசின் குளிர்கால நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சர் கூறினார்.

பட்டாசுகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றிற்கானத் தடை வருகிற ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *