தில்லியில் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவு!

Dinamani2f2024 12 122f492se2ez2f8b86d795 5506 4525 8ff6 Fa8ce1001b52.png
Spread the love

தில்லியில் மிகக்குறைந்தளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடைகாலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமையன்று குளிர்காலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. அயநகர் மற்றும் புசா உள்ளிட்ட இடங்களில் முறையே 3.8 மற்றும் 3.2 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளது.

சீதாவாக நடிக்க அசைவம் சாப்பிடவில்லையா? ஆவேசமான சாய் பல்லவி!

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறுகையில், “வெப்பநிலை 4 டிகிரிக்கும் கீழே குறையும் போது குளிர் அலைகள் உருவாகின்றன. தில்லியில் புதன்கிழமையான நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸாக இருந்தது” எனக் கூறினர்.

கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்கு கீழ் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்பு!

முந்தையகால தரவுகளின்படி, டிசம்பர் மாத காலகட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி 4.1 டிகிரி செல்சியஸ் பதிவானதே இன்று வரை மிகக்குறைந்தபட்சமாக நீடிக்கிறது.

24 மணி நேர சராசரி காற்று தரக்குறியீடு புதன்கிழமை 199 ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காற்று தரக்குறியீடு 262 ஆக உயர்ந்து மோசமான நிலையை எட்டியுள்ளது.

தொடர் கனமழை: சென்னையில் 15 விமானங்கள் தாமதம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *