தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம்

Dinamani2f2025 02 172fis0ry0o52fbihar.jpg
Spread the love

தலைநகர் தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பிகார் மாநிலம், சிவான் பகுதியில் திங்கள்கிழமை காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கடியில் 10 கிமீ தொலைவில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதேபோல் வடகிழக்கு மாநிலமான சிக்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 2.3ஆகப் பதிவாகியுள்ளது.

முன்னதாக தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

தலைநகர் தில்லியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இந்த நிலநடுக்கத்தால் தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *