சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தில்லி வக்ஃப் வாரிய தலைவராக அமானத்துல்லா கான் கைது இருந்தபோது, பணி நியமனத்திற்காக பணம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பணி நியமனத்திற்காக ரூ. 100 கோடி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக அமானத்துல்லா கான் வெளியிட்ட விடியோவில், தன்னை கைதுசெய்து துன்புறுத்துவதே அமலாக்கத்துறை அதிகாரிகள் நோக்கம் என்று தெரிவித்து இருந்தார்.