இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் தில்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டடங்களை கட்டுவதற்கு ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த புதிய கட்டடத்தில் மிக முக்கிய பிரமுகர் புகுதி, விருந்தினர் மாளிகை பகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த கட்டடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள், 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நுாலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்த புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.