தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

Dinamani2f2024 12 042fqll3m7y32frahul Gandhi.png
Spread the love

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த நவ. 19 ஆம் தேதி மசூதி கள ஆய்வு செய்யப்பட்டபோது ஏராளமான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க | பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுலுக்கு உரிமை உள்ளது: பிரியங்கா காந்தி

Gd8Ap5GaYAAY5vi

அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட மக்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பதற்றத்தை தணிக்கும் வகையில் அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் உள்பட வெளி ஆள்கள் நுழைய சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்க | சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்ல தயார்.. ஆனால்: ராகுல்

இதைத் தொடர்ந்து, சம்பல் பகுதியை இன்று பார்வையிடச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியை காஸிப்பூர் எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். திரும்பிச் செல்லும்படி காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி தனியாகச் செல்ல தயாராக இருப்பதாகக் கூறியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேச்சுவார்த்தைக்குப் பிறகும் காவல்துறை அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வேறுவழியின்றி தில்லிக்கு திரும்பியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *