தில்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்த வாரத்தில் மூன்றாவது சம்பவம்

Dinamani2f2024 12 142fqtw395gt2fbomb Threat.jpg
Spread the love

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தில்லி டிபிஎஸ் ஆர்கே புரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

இது தொடர்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை காலை 6.09 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் அழைப்பு வந்தது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீஸார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் அந்தப் பள்ளியில் வெடிகுண்டு கண்டறியும் குழு மூலம் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

வெள்ளிக்கிழமை சுமார் 30 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *