தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்துள்ளார்
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், மக்களவைத் தேர்தலை போன்று, காங்கிரஸுடன் இணைந்து ஆம் ஆத்மி போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதில் சாத்தியக்கூறு இல்லை என்று ஏற்கெனவே கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : ‘பிராமண’ குடிப்பெயர்களைச் சேர்த்துக் கொள்ளும் உ.பி. கிராம முஸ்லிம்கள்!
இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க ஆம் ஆத்மி முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியாகின.
இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கேஜரிவால், தில்லி தேர்தலை ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் எதிர்கொள்ளவுள்ளது, காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Aam aadmi party will be fighting this election on its own strength in Delhi. There is no possibility of any alliance with congress. https://t.co/NgDUgQ8RDo
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 11, 2024
கூட்டணி குறித்து கேஜரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், இந்த முறை தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.