தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

Dinamani2f2025 02 112fgulkxw4e2frekha.jpg
Spread the love

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

தில்லி முதல்வர் யார் என்பது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

பெண் வேட்பாளர் ரேகா குப்தா

முதல்வர் போட்டியில் அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது.

இந்த நிலையில், தில்லியின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக ஜாதி மற்றும் பாலினம் போன்ற காரணிகளை சமன்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

பெண் அல்லது பட்டியலின வேட்பாளரை தில்லி முதல்வராக மத்திய பாஜக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

ரேகா குப்தாவின் பின்னணியைப் பார்க்கும்போது மாணவ பருவத்தில் இருந்து அரசியல் பயணம், கட்சியில் நடுநிலை போன்ற காரணிகளுடன் வலுவான போட்டியாளராக உள்ளார்.

ஒரு பெண் வேட்பாளரை முதல்வராக்க நினைத்தால் இவரின் வைஷ்ய சமூகப் பின்னணியும் தில்லி பல்கலைக்கழக சங்கத் தலைவராக இருந்த அனுபவமும் இவருக்கு நன்மை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *