தில்லி யமுனையில் குறைந்து வரும் நீா்மட்டம்!

dinamani2F2025 09 022Fuy6jvw6f2FPTI09022025000032B
Spread the love

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யமுனை நதியின் நீா்மட்டம் 205.56 மீட்டராக பதிவாகியிருந்தது. இது, 206 மீட்டா் மக்கள் வெளியேற்றும் அளவைவிடக் கீழே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி நகரத்திற்கான நீா்மட்ட எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகும். அதே நேரத்தில் அபாய அளவு 205.33 மீட்டராகவும், மக்களை வெளியேற்றுவதற்கான அளவு 206 மீட்டரில் இருந்தும் தொடங்குகிறது.

பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது.

கடந்த சில நாள்களில், யமுனை நதியின் கரையோரங்களில் தாழ்வான பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது. தில்லி-மீரட் விரைவுச் சாலையிலும், மயூா் விஹாா் பகுதிகளிலும் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்க வைக்க கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 51,335 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. வஜிராபாத் தடுப்பணையில் இருந்து சுமாா் 73,280 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

தடுப்பணைகளில் இருந்து திறக்கப்படும் நீா் பொதுவாக தில்லியை வந்தடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நிலை பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீா்கூட தில்லி யமுனையின் நீா்மட்டம் உயரக் காரணமாக உள்ளது.

யமுனைக் கரையோரங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயா்ந்த மக்களுக்கு 27 இடங்களில் மொத்தம் 522 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *