தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி! | Kerala High Court takes action against The Kerala Story 2 release, which was scheduled to be released tomorrow!

Spread the love

தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா 2023-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த சினிமாவுக்கு கேரளா சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சினிமா வெளியிடப்பட்டது.

கேரள மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் “தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்’ (The Kerala Story 2 Goes Beyond) என்ற திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்தப் படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையே அந்தச் சினிமாவின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தன.

ஒரு மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளும், கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ள டீசர் விவாதத்தைக் கிளப்பியது. டீசருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் அந்தச் சினிமாவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே ‘கேரளா ஸ்டோரி 2’ என்று பெயரிடப்பட்டதாகவும், அது மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி

தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி

பிரிவினை, வன்முறை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள சினிமாக்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதே சமயம் தி கேரளா ஸ்டோரி -2 சினிமாவுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தச் சினிமாவின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிலர் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *