தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகரை இணைக்க ரூ.165 கோடியில் இரும்பு பாலம் திறப்பு | Iron bridge opened to connect T Nagar South Usman Road to CIT Nagar

Spread the love

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில் தி.நகர், தெற்கு உஸ்​மான் சாலை மற்​றும் சிஐடி நகர் பிர​தான சாலையை இணைக்கும் வகை​யில் ரூ.164.92 கோடி​யில் இரும்​பி​னால் கட்​டப்​பட்ட ஜெ.அன்​பழகன் மேம்​பாலத்தை மக்​கள் பயன்​பாட்​டுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யின் சார்​பில் உயரிய தொழில்​நுட்​பத்​துடன் தி.நகர் தெற்கு உஸ்​மான் சாலை மற்​றும் சிஐடி நகர் பிர​தான சாலையை இணைக்​கும் வகை​யில் 3,800 டன் இரும்​பி​னால் வடிவ​மைக்​கப்​பட்டு ரூ.164.92 கோடி செல​வில் முதல் இரும்பு மேம்​பாலம் கட்​டப்​பட்​டுள்​ளது.

சிஐடி நகர் முதல் பிர​தான சாலை​யில் உள்ள தெற்கு உஸ்​மான் சாலை மேம்​பாலத்​தின் சாய்​வுதளப் பகு​தியி​லிருந்து சிஐடி நகர் நான்​காவது பிர​தான சாலை சந்​திப்பை இணைக்​கும் வகை​யில் கட்​டப்​பட்​டுள்ள இந்த மேம்​பாலம் மூலம், தெற்கு உஸ்​மான் சாலை – பர்​கிட் சாலை – மேட்லி சாலை ஆகிய​வற்​றின் சந்​திப்​பு, தெற்கு உஸ்​மான் சாலை – தென்​மேற்கு போக் சாலை – நியூ போக் சாலை ஆகிய​வற்​றின் சந்​திப்​பு, தெற்கு உஸ்​மான் சாலை – சிஐடி நகர் வடக்கு சாலை சந்​திப்பு ஆகிய​வற்​றில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த புதிய மேம்​பாலம், 1,200 மீட்​டர் நீளம் மற்​றும் 8.40 மீட்​டர் அகலத்​தில் 53 இரும்பு தூண்​களு​டன் இரு​வழிப்​பாதை​யாக அமைக்​கப்​பட்டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் மிக நீண்ட பால​மாக 2 கி.மீ. நீளத்​தில் கட்​டமைக்​கப்​பட்​டுள்ள இந்த பாலத்​தில் தினசரி 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக​னங்​கள் பயணித்​து, 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பொது​மக்​கள் பயன்​பெறு​வார்​கள்.

இந்​தப் பாலத்​துக்கு தி.நகர் தொகு​தி​யின் மறைந்த முன்​னாள் எம்​எல்ஏ ஜெ.அன்​பழகன் பெயரைச் சூட்​டி, பாலத்தை திறந்துவைத்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று பார்​வை​யிட்​டார். இந்​நிகழ்​வில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரி​யா, ஆ.ராசா எம்​.பி. எம்​எல்​ஏ.க்​கள் ஜெ.கருணாநி​தி, த.வேலு, தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்கு​மார், துறை​யின் செயலர் தா.​கார்த்​தி​கேயன், மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் ​வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.​வினய், வீட்​டு​வசதி வாரிய தலை​வர் பூச்சி எஸ்​.​முரு​கன், சென்னை மாநக​ராட்சி நியமனக்​குழு உறுப்​பினர் ராஜா அன்​பழகன், சென்னை தென்​மேற்கு மாவட்ட திமுக தலைமை பொதுக்​குழு உறுப்​பினர் ஜெ.ஜானகி​ராமன், தி.நகர் கிழக்கு பகுதி திமுக மாவட்ட பிர​தி​நிதி ஜெ.சீனி​வாசன், தி.நகர் மேற்கு பகுதி செய​லா​ளர் கே.ஏழு​மலை உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *