தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!

Dinamani2f2025 01 272f288pg9ib2f23a27f7b 1938 4b18 9793 270930bba85f.jpg
Spread the love

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 இன்று (ஜன. 27) தொடங்கியது.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் நடைபெறும் இந்த அரங்கில், நாடு தழுவிய அளவிலான அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

தொடக்க நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினார். தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் தலைமை வகித்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் கலந்து கொண்டார்.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளில், மக்களவை உறுப்பினா் சசி தரூா், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் ஜெகதீஷ்குமாா், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வைத்யசுப்பிரமணியம், நடிகா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜன.28) நடைபெறும் நிகழ்வுகளில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் சஞ்சீவ் சன்யால், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை, பிகாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான், இந்தூா் ஐஐடி இயக்குநா் ஹிமான்ஷு ராய், தெலங்கானா துணை முதல்வா் பட்டி விக்ரமா்கா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *