‘தி.மு.க கூட்டணியில் ராமதாஸ்?’ – செல்வபெருந்தகை கருத்துக்கு வி.சி.க கண்டனம்! |VCK condems Selvaperunthagai remarks Over Pmk in Dmk alliance

Spread the love

செல்வபெருந்தகையின் கருத்துக்கு ரியாக்ட் செய்த வி.சி.க திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, “கூட்டணியில் யார் யார் என்பதை தி.மு.க முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே.

சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை” என கண்டித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், “ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை 14 ஆண்டுகளாக சொல்லிவருகிறது வி.சி.க. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ராமதாஸ் கூட்டணிக்கு வரலாம் என பேச்சுகள் எழுந்தவுடனேயே வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதன்பிறகு, எங்கள் தலைவருமே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். வி.சி.க ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு ‘அவர்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை.. சந்தித்து பேசினால் சரியாகிவிடும்.. முதல்வர் முடிவெடுப்பார்’ எனப் பேசியது சரியல்ல” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *