நெல்லை மாவட்டம் வாகைக்குளம், மூன்றடைப்பை சேர்ந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் தீபக்ராஜா பாண்டியன். இவர் இன்று(20-தேதி) மதியம் நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது மர்ம கும்பல் தீபக்ராஜா பாண்டியனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கெலயாளிகளை கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் நெல்லையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர்.
உடலை வாங்க மறுப்பு
அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை தீபக்ராஜா பாண்டியனின் உடலை வாங்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் தொடர்ந்து பதட்டமான நிலையே நீடித்து வருகிறது.
வீடியோகாட்சி
இதற்கிடையே ஓட்டல் முன்பு தீபக்ராஜா பாண்டியனை மர்ம நபர்கள் அரிவாளர் சரமாரியாக வெட்டும் காட்சி ஒட்டலில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அந்த வீடியோவில் ஓட்டலின் வெளியே இருந்து மர்ம கும்பல் தீபக்ராஜா பாண்டியனை விரட்டி வருகிறார்கள். அப்போது அவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டலுக்குள் வர ஓடிவந்த நேரத்தில் கார் ஒன்றை பின்னோக்கி வாடிக்கையாளர் ஒருவர் எடுக்கிறார். இதில் நிலைதடுமாறிய தீபக்ராஜா பாண்டியன் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் மீது கால் இடறி கீழே விழுகிறார். உடனே மர்ம கும்பல் தீபக்ராஜா பாண்டியனை கண்இமைக்கும் நேரத்தில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி செல்கிறார்கள்.
இதனை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.